ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவதை நிறுத்தி வைத்தது இந்தியா..

அமெரிக்கா தடைவிதிக்கலாம் என்பதால் ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கும் முடிவை இந்தியா கைவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா டாலர் வர்த்தகத்துக்கு மாற்றாக பணப்பரிவர்த்தனை செய்ய இந்தியாவுடன் ஆலோசித்து வருகிறது. ரூபாயில் பணப் பரிவர்த்தனை செய்யும்படி ரஷ்யாவுக்கு இந்தியா அளித்த யோசனையை புதின் அரசு ஏற்கவில்லை.
இதனால் ஆயுதங்கள் வாங்க ரஷ்யாவுக்கு இந்தியா அளிக்க வேண்டிய சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகை ஓராண்டாக நிலுவையில் உள்ளது.
இதன் காரணமாக பத்து பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவத் தளவாட உதிரி பாகங்களை சப்ளை செய்வதை ரஷ்யா நிறுத்தி வைத்துள்ளது. S 400 ஏவுகணைகளுக்கான இரண்டு பேட்டரிகளைத் தராமலும் ரஷ்யா தாமதித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்கா ரஷ்யா மீது விதித்த கட்டுப்பாடுகளை மீறாத வகையில் ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கும் முடிவை தற்காலிகமாக இந்தியா நிறுத்தி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
Comments