ஓடுதளத்தில் இறங்கும் போது தரையில் உரசிய விமானம்.. விமானி சாமர்த்தியமாக கையாண்டதால் விபத்து தவிர்ப்பு

லக்ஸம்பர்க் நாட்டில் கார்கோலக்ஸ் விமானம் தரையிறங்கும் போது அதன் என்ஜின் ஓடுதளத்தில் உரசிய நிலையில், விமானி சாமர்த்தியமாகச் செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
துபாய் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லக்சம்பர்க் ஃபைன்டல் விமான நிலையத்திற்குச் சென்ற கார்கோலக்ஸ் விமானம் தரையிறங்கும் போது அதன் என்ஜின் தரையில் உரசியது. அதன் இறக்கைகள் வளைந்து விபத்தில் சிக்க இருந்தது.
இதையடுத்து விமானத்தை மீண்டும் மேலெழுப்பி மற்றொரு ஓடுபாதையில் பத்திரமாகத் தரையிறக்கினார். இதனால் பெரும் விபத்தில் இருந்து விமானம் தப்பியது.
Cargolux flight CLX5BP sustained damage to its left engine casing during landing at Luxemburg forcing the pilots to go-around…
pic.twitter.com/1lnp0JcRNN
Comments