நிதி நிறுவனம் மூலம் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் 200 கோடி ரூபாய் வரை மோசடி

0 6483

சென்னை பெரம்பூரில் நிதி நிறுவனம் மூலம் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெரம்பூர் பாரதி சாலையில் கடந்த 50 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த நிதி நிறுவனத்தில் அண்மையில் கூடுதல் வட்டி தருவதாக அறிவிப்பு வெளியிட்டதால் ஏராளமானோர் முதலீடு  செய்துள்ளனர்.

ஆனால் அவர்களுக்கு வட்டி தொகை தராததால்  600-க்கும் மேற்பட்டோர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து நிதி நிறுவனத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதுடன்  மோசடி செய்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர்கள் வசந்தி , சக்தி மற்றும் கண்ணன் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments