கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நாகராஜு 1,609 கோடி ரூபாய்க்கு சொத்துக் கணக்கு தாக்கல்

0 4551

கர்நாடக சட்டசபைத் தேர்தலில், பெங்களூரு புறநகர் பகுதியான ஹோஸ்கோட் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான நாகராஜூ தனக்கும் தனது மனைவிக்கும் 536 கோடி ரூபாய் அசையும் சொத்துக்கள் உள்பட மொத்தம் ஆயிரத்து 609 கோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் கனகபுரா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் டி கே சிவக்குமார் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், தனக்கு ஆயிரத்து 358 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதில் 941 கோடி ரூபாய் அசையா சொத்துக்களாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments