ரஃபேல் வாட்சின் பில்லை வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.!

0 3711

சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தான் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்சின் பில்லை அண்ணாமலை வெளியிட்டார். இந்தியாவில் உள்ள 2 ரபேல் வாட்ச்சுகளில் ஒன்று தன்னிடம் உள்ளது என்று கூறிய அண்ணாமலை, விலையைத் தாண்டி சிறப்புக்காக தான் இந்த வாட்ச் வைத்துள்ளேன் என்றார்.

அரசியலில் தனக்கு மாதம் 7 முதல் 8 லட்ச ரூபாய் வரை செலவாகிறது என்று கூறிய அண்ணாமலை, தன் உதவியாளர்களுக்கான ஊதியத்தை தன் நண்பர்களே கொடுக்கின்றனர் என்றும், வாகன எரிபொருளுக்கான செலவை கட்சி கொடுப்பதாகக் கூறினார்.

MBA படித்தபோது வாங்கிய 11 லட்ச ரூபாய் கடனை 7 ஆண்டுகள் கஷ்டப்பட்டு கட்டினேன் என்றும் அண்ணாமலை கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments