''தென்மேற்கு பருவ மழைக்காலத்தில் இயல்பை ஒட்டி மழைப்பொழிவு இருக்க கூடும்..'' - இந்திய வானிலை ஆய்வு மையம்..!

இந்தியாவில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவை ஒட்டி இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழை தரும் தென்மேற்கு பருவமழை குறித்து நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தென்மேற்கு பருவ மழைக்காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை சராசரியாக சுமார் 83 புள்ளி 5 சென்டி மீட்டர் மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பருவமழை காலத்தின் 2ஆவது பாதியில், மேக வெடிப்பு எனப்படும் எல் நினோவின் தாக்கம் இருக்கக்கூடும் என்பதால், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப தென்மேற்கு பருவமழை மாறுபட வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
Comments