அமுல் பால் பொருட்கள் விற்பனைக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம்..!

கர்நாடகாவில் அமுல் பால் பொருட்கள் விற்பனைக்கு எதிராக கர்நாடக ரக்சன வேதிகே அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குஜராத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் பால் பொருட்களை விற்பனை செய்து வரும் அமுல் நிறுவனம் தனது விற்பனையகத்தை பெங்களூரில் துவங்கியுள்ளது.
அமுலின் வருகையால், நந்தினி என்ற பெயரில் கர்நாடக பால் கூட்டுறவு அமைப்பு நடத்தி வரும் பால் பொருட்களின் விற்பனை சரியும் என்றும், கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறியும் போராட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் மற்றும் ஜனதாதள் கட்சியினர் நந்தினி பால் விற்பனையை அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர் என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
Comments