10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்வு அறையில் 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 6ம் தேதியன்று, தக்கலை அருகே உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் தேர்வு எழுதிய மாணவியை தொட்டுப்பேசி தேர்வறை கண்காணிப்பாளராக செயல்பட்டு வந்த ஆசிரியர் வேலவன், சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
தேர்வு எழுதும் நேரத்தில் என்ன சொல்வது எனத்தெரியாமல் இருந்த மாணவி, வீட்டுக்கு சென்றதும் பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, குழித்துறை அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளிக்கப்படவே, விசாரணை நடத்திய போலீசார், வேலவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Comments