போதை இளைஞன் செய்த செயலால், இருசக்கர வாகன ஓட்டி மரத்தில் மோதி பலி..!

புதுச்சேரியில், மது அருந்திவிட்டு சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை மறித்து வம்பிழுத்துக் கொண்டிருந்த கும்பலில் ஒருவன், அதிவேகமாகச் சென்ற இருசக்கர வாகனத்தை அடிப்பது போல் சைகை செய்ததில் நிலை தடுமாறிய அந்த வாகன ஓட்டி, மரத்தில் மோதி உயிரிழந்தார்.
முத்துப்பிள்ளை பாளையத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான விஷால் என்ற இளைஞர், நேற்றிரவு தனது நண்பரை பார்க்க வேகமாக பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில், லப்போர்த்தனே சாலையில் பெண் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு போதையில் சாலையில் அடாவடி செய்துக் கொண்டிருந்த கும்பலில் ஒருவன், அவ்வழியாக வேகமாக பைக்கில் வந்த விஷாலை அடிப்பது போல சைகை செய்ததில், நிலைதடுமாறிய விஷால் அருகில் இருந்த மரத்தில் மோதி உயிரிழந்தார்.
சம்பவத்தை அடுத்து அந்த போதை கும்பலைச் சேர்ந்த 5 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்த நிலையில், விபத்துக்கு காரணமான முகேஷ் என்பவனை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments