ஓடும் பேருந்தில் வைத்து தம்பி மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த அண்ணன் கைது..! சொத்து தகராறில் கொடூரம்

திண்டுக்கல் அருகே, ஓடும் பேருந்தில் வைத்து தம்பி மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
நத்தத்திலிருந்து திண்டுக்கல் சென்ற பேருந்தில் பயணித்த ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், தமயந்தி என்ற 40 வயது பெண்ணை கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். அலறியடித்து ஓடிய பேருந்து பயணிகளுடன் சேர்ந்து அந்த நபரும் தப்பியோடினார்.
போலீஸ் விசாரணையில், அவரது பெயர் ராஜாங்கம் என்பதும், நிலத் தகராறில் அவரது தம்பிக்கு சாதகமாக ஓரிரு நாட்ளில் தீர்ப்பு வர உள்ளதால், குடும்ப பிரச்சினைக்கு காரணம் தம்பி மனைவி தமயந்தி தான் என கருதி அவரை பின்தொடர்ந்து சென்று கொலை செய்துள்ளது தெரியவந்தது. ராஜாங்கத்தை திண்டுக்கல் அருகே வைத்து போலீசார் கைது செய்தனர்.
Comments