புதுச்சேரியில் பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்..!

0 1654

புதுச்சேரியில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செய்தியாளரை சந்தித்த ஆட்சியர் வல்லவன், கொரோனா தொற்று பரிசோதனை செய்பவர்களில் 15 சதவீதம் பேருக்கு பாதிப்பு உறுதியாவதாகத் தெரிவித்தார்.

இதனால் பொது இடங்களான கடற்கரை, சந்தை, திரையரங்குகளுக்கு வருபவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என கூறினார்.

ஊழியர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும், அரசு உத்தரவை பொதுமக்கள் கடைப்பிடிக்காத பட்சத்தில் அபராதம் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments