''திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ரூ.600 கோடி மதிப்பீட்டில் டைடல் பூங்கா அமைக்கப்படும்..'' - அமைச்சர் தங்கம் தென்னரசு..!

திருச்சி பஞ்சப்பூரில் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என்றும், ராசிபுரம் மற்றும் காரைக்குடி நகரங்களில் தலா 35 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் தொழில்துறை மானியக்கோரிக்கை பதிலுரையில் பேசிய அமைச்சர், சிறுநகரங்களை நோக்கி மென்பொருள் நிறுவனங்கள் உருவாகி வருவதால், இரண்டாம் கட்ட நகரங்களில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படுவதாக தெரிவித்தார்.
கடந்த இரு ஆண்டுகளில் இந்தியளவில் அதிகளவு முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளதாகவும், ஏற்றுமதியில் இந்தியாவில் தமிழ்நாடு 3வது இடம் வகிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
Comments