கோயில் திருவிழாவாவில் பக்தி பாடலுக்கு நடனமாடிய எஸ்.ஐ பணியிடை நீக்கம்..!

கேரள மாநிலம் இடுக்கியில் கோயில் திருவிழாவாவில் தமிழ் பக்தி பாடலுக்கு நடனமாடிய காவல்துறை உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சாந்தன்பாறை கிராம கோயில் விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ ஷாஜி, அங்கு ஒலிபரப்பான மாரியம்மா, மாரியம்மா என்ற தமிழ் திரைப்பட பக்தி பாடலுக்கு பொதுமக்கள் முன்னிலையில் நடனமாடினார்.
அவரது நடனத்தையும், அவரை சிலர் அங்கிருந்து அப்புறப்படுத்திச் செல்வதும் பதிவு செய்யப்பட்டு சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டது.
இந்த வைரல் வீடியோவைத் தொடர்ந்து, சீருடை காவலர் தனது பணிக்கு மாறான செயலில் ஈடுபட்டதாகக் கூறி அவரை பணியிடை நீக்கம் செய்து எர்ணாகுளம் சரக டிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Comments