விரட்டிய கேமராக்கள்.. மூக்குமேல கோபம் வந்த அம்மனான நயன்தாரா..! செல்போனை உடைப்பேன் என எச்சரிக்கை..!

0 7168

குல தெய்வ கோவிலுக்கு வழிபட சென்றிருந்த விக்னேஷ் சிவன் - நயன்தாராவுடன் செல்பி எடுக்க இளம் பெண்கள் முண்டியடித்த நிலையில், ரசிகர்களின் அன்புத்தொல்லைக்கிடையே சென்னை திரும்புவதற்காக ரெயிலில் ஏறிய நயன்தாராவை, செல்போனில் படம் பிடித்த இளைஞரை எச்சரித்த சம்பவம் அரங்கேறி உள்ளது..

விக்னேஷ்சிவன் - நயன்தாரா ஜோடி குலதெய்வ வழிபாட்டிற்காக கும்பகோணம் அடுத்த மேலவழுத்தூர் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரை காமாட்சி அம்மன் ஆலயத்துக்கு சென்றனர். நயன்தாரா வருவதை அறிந்த உள்ளூர் பிரமுகர்கள் பொன்னாடை வாங்கி வைத்து காத்திருந்தனர். கோவிலுக்கு வந்த நயனிடம் பொன்னாடை கொடுத்த போது அதனை அவர் ஏற்கவில்லை.

சிறிய அளவிலான கோவில் என்பதால் நயன், விக்கியுடன் போலீசாரும் கோவிலுக்குள் நின்றனர். கோவிலில் சாமி கும்பிட்ட நயனை போட்டோவுக்கு போஸ் கொடுக்க சொன்னதால் டென்சனான நயன் விக்கி ஜோடி ஒளிப்பதிவாளர்களை போலீஸ் உதவியுடன் வெளியே விரட்டி விட்டனர்

அங்கு வழிபாட்டை முடித்துக் கொண்டு ஐராதீஸ்வரர் கோவிலுக்கு சென்றது நயன் விக்கி ஜோடி. முன் எச்சரிக்கையாக கோவில் வாசல் முன் பக்கமாக பூட்டப்பட்டது. அவரை காணும் ஆவலில் தாய்மார்களும் ரசிகர்களும் வாசலுக்கு வெளியே காத்துக்கிடந்தனர்

வெளியே வந்த உடன் அவர்களை நோக்கி சிரித்த படி கையசைத்த நயன்தாராவை, அங்கிருந்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் பாதுகாப்பு பணியை மறந்து காவல் அதிகாரியும் செல்போனில் படம் பிடித்தார்

பின் தொடர்ந்து வந்த கல்லூரி மாணவிகளுடன் செல்பி எடுத்த போது ஒரு பெண் நயனின் தோளில் கைவைத்ததால் மீண்டும் டென்சனான நயன் சத்தம் போட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினார்.

காரில் ஏறிய விக்கி மற்றும் நயனுடன் அங்குள்ள மக்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டதோடு, உங்க படத்தை முழுசா பார்ப்போமுன்னு அவரை குளிர்விக்கும் விதமா பேசி வழியனுப்பி வைத்தனர்

 

அங்கிருந்து திருச்சி ரெயில் நிலையம் வந்த நயன்தாராவை காண ரெயில் நிலையத்தில் கூட்டம் முண்டியடித்தது. ஆளாளுக்கு செல்போனில் படம் பிடித்ததால் நயன் கடு கடுவென காணப்பட்டார்

ஒருவழியாக கூட்டத்தை மீறி ரெயிலுக்குள் ஏறியபோது அங்கும் ஒரு ரசிகர் நயனை செல்போனில் படம் பிடித்தபடி நின்றார், அடுத்த நொடி மூக்கு மேல கோபம் வந்த அம்மனாக முறைத்து பார்த்த நயன்தாரா அந்த இளைஞரை பார்த்து தன்னை படம் எடுக்க கூடாது என்றும் எடுத்த செல்போனை உடைத்து விடுவேன் என்றும் எச்சரித்தார்

குள்ளமணி போனாலே கும்பலாக போய் செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் வைக்கும் டேஸ்ட் கொண்ட ஸ்மார்ட் போன் இளையதலைமுறையினர் கொடுத்த அலப்பறையால் விழிபிதுங்கி போன நயன், நல்ல வேளையாக ரசிகர்களின் செல்போனை சிவக்குமார் போல தட்டிவிடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments