ஹரியானாவில் கழிவுநீர் தொட்டிக்குள் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு..!

0 1397

ஹரியானாவில் கழிவுநீர் தொட்டியில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது விஷவாயு தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள ஜகோடா கிராமத்தில் ஒரு கொத்தனார் மற்றும் சில தொழிலாளர்கள் தொட்டியை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தொட்டிக்குள் முதலில் இறங்கிய கொத்தனார் விஷவாயு தாக்குதலுக்கு உள்ளாகி மயக்கமடையவே, அவரை காப்பாற்றுவதற்காக, ஒருவர்பின் ஒருவராக தொட்டிக்குள் இறங்கிய மற்ற 3 பேரும் மயக்கமடைந்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர், 4 பேரையும் சடலமாக மீட்ட நிலையில், இறந்தவர்களில் இரண்டு பேர் உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments