அதிக வட்டித் தருவதாக கூறி ரூ.40 கோடி மோசடி... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 காவலர்கள் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

அதிக வட்டித் தருவதாக கூறி ரூ.40 கோடி மோசடி... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 காவலர்கள் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்
காஞ்சிபுரத்தில் அதிக வட்டி தருவதாக கூறி 40 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் கைதான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு காவலர்கள் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஏனாத்தூரைச் சேர்ந்த ஜோசப் - மரியச் செல்வி தம்பதியின் மூத்த மகன் சகாய பாரத், மாமல்லபுரம் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராகவும், 2வது மகன் ஆரோக்கிய அருண் போக்குவரத்து காவலராகவும், மூன்றாவது மகன் இருதயராஜ் பள்ளிக் கல்வித்துறையிலும் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வது, பெரு நிறுவனங்களின் விற்பனை உரிமை எடுப்பது பல்வேறு தொழில்களில் ஈடுபடுவதாகவும், இதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறி பொதுமக்கள் மற்றும் போலீசாரிடம் 40 கோடி வரை பணம் பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில், இவர்களது குடும்பத்திலுள்ள 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Comments