அருணாச்சலப்பிரதேசத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு பெயரிட்டு மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் சீனா..!

அருணாச்சலப் பிரதேசத்தின் குறிப்பிட்ட பகுதிகள் மீது சீனா பெயரிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் சிவில் விவகார அமைச்சகம், அருணாச்சலப் பிரதேசத்தின் சில குடியிருப்பு பகுதிகள், 5 மலை சிகரங்கள், ஆறுகள் உள்ளிட்ட இடங்களுக்கு 3வது முறையாக புதிதாக பெயரிட்டு சீன, திபெத்திய மற்றும் யின்யின் எழுத்துக்களால் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன் முதல் தொகுதி 2017ம் ஆண்டும், 2ம் தொகுதி 2021ம் ஆண்டும் வெளியிடப்பட்டது. அருணாச்சலப் பிரதேசத்தில் சில இடங்களின் பெயரை மாற்றும் சீன நடவடிக்கையை இந்தியா முன்னரே நிராகரித்தது.
அந்த மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் இருந்து வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
Comments