அமெரிக்காவில் நண்பரை அழைத்து வருவதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த இந்தியர் பேருந்து மோதி பலி..!

அமெரிக்காவில் போசன் சர்வதேச விமான நிலையத்தில் நண்பரை அழைத்து வருவதற்காக காத்திருந்த இந்தியாவைச் சேர்ந்த தரவு ஆய்வாளர் பேருந்து மோதி உயிரிழந்தார்.
ஆந்திராவைச் சேர்ந்த விஸ்வசந்த் கோலா, அமெரிக்காவில் மருந்து நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்த நிலையில், விமானத்தில் வந்த தனது நண்பரை அழைத்து வருவதற்காக மாசசூசெட்ஸ் மாகாணத்திலுள்ள போசன் விமான நிலையத்திற்கு காரில் சென்றுள்ளார்.
பி முனையத்தில் காரின் அருகில் நின்றுக் கொண்டிருந்த போது விமான பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து மோதியதில் அதே இடத்தில் அவர் உயிரிழந்தார்.
Comments