குழந்தைகளுடன் விடுதலை படம் பார்க்கச் சென்ற பெண் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார்..!

பெரியவர்கள் மட்டுமே பார்க்க உகந்த படமாக சான்றளிக்கப்பட்ட விடுதலை படம் பார்க்க குழந்தைகளை அழைத்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று வெளியான விடுதலை படத்தை பார்க்க விருகம்பாக்கம் ஐநாக்ஸ் திரையரங்கிற்குள் வளர்மதி என்பவர் குழந்தைகளை அழைத்து வந்த நிலையில், டிக்கெட் பரிசோதகர் அனுமதி மறுத்தும், அவரை மீறி திரையரங்கத்திற்குள் அழைத்து சென்றுள்ளார்.
போலீசாரிடமும் வளர்மதி வாக்குவாதம் செய்த நிலையில் திரையரங்க ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments