கறம்பக்குடி அருகே மழையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மழையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவக்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் சுமார் 600 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாடிவாசலில் பாய்ந்து வரும் காளைகளை வீரர்கள் அடக்கி வருகின்றனர்.
போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயம், மின்விசிறிகள், கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் போட்டியை காண குவிந்துள்ளர்.
Comments