ஆல்டோ 800 கார் உற்பத்தியை நிறுத்த மாருதி சுசுகி நிறுவனம் முடிவு..!

மாருதி சுசுகி நிறுவனம், தனது அதிக விற்பனை கார்களுள் ஒன்றான ஆல்டோ 800 கார் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது.
3 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டுவரும் ஆல்டோ 800 கார், மாருதி நிறுவனத்தின் என்ட்ரி லெவல் காராக இருந்து வந்தது. இந்நிலையில், பி.எஸ்.6 மாசுகட்டுப்பாட்டின் இரண்டாம் கட்டத்திற்கு ஏற்ப, இந்த காரை மேம்படுத்த அதிக செலவாகும் என்பதால், அதன் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆல்டோ K10 கார் தேவை அதிகரித்திருப்பதும், ஆல்டோ 800ன் உற்பத்தியை நிறுத்துவதற்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. இனி, ஆல்டோ K10 கார், மாருதி நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் காராக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு இந்தியாவில் ஆல்டோ 800 கார் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, இதுவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments