காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய பேராசிரியர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது..!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளை சாதியைக் குறிப்பிட்டு தரக்குறைவாக பேசியதாக, பேராசிரியர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தென்காசியைச் சேர்ந்த சண்முகராஜா, இக்கல்லூரியில் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது துறையில் பயிலும் மாணவ, மாணவிகளை சாதியைக் குறிப்பிட்டு ஒருமையில் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர், கடந்த பிப்ரவரி 17ம் தேதி பேராசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக வீடியோவும் வெளியானது.
இது தொடர்பாக மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், பேராசிரியர் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Comments