தருமபுரியில் மீட்கப்பட்டு முதுமலையில் பராமரிக்கப்பட்டு வந்த குட்டி யானை உயிரிழப்பு
பென்னாகரம் அருகே கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட தாயை பிரிந்த குட்டி யானை முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.
ஆஸ்கர் விருது பெற்ற எலிபெண்ட் விஸ்பெரர் ஆவணபட தம்பதி பொம்மன், பெல்லி மூலம் தனியாக பராமரிக்கப்பட்டு வந்த குட்டி யானைக்கு லாக்டோஜென், இளநீர் உள்ளிட்ட திரவ உணவுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயை பிரிந்த யானை குட்டிக்கு என்சைம் சுரப்பது குறைந்ததால், லேக்டோஜன் செரிமானம் ஆகாமல் உடலில் சேகரமானதால், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக யானைக்குட்டிக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments