கண்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி கேபிள் டிவி ஊழியர் உயிரிழப்பு

0 2173

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி கேபிள் டிவி ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கேபிள் டிவி ஊழியர் தமிழரசன் என்பவர் மனைவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் திடீரென அவர் அந்த லாரியை இடது பக்கமாக முந்தி செல்ல முயன்ற போது எதிரில் இருந்த பேரிகார்டு மோதியதில்  மூவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில் மனைவி, குழந்தை காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், தமிழரசன் மீது கண்டெய்னர் லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கி உடலை ஒரு கிலோ மீட்டர் தூரம் இழுத்து சென்றது.

இந்த விபத்தின் வீடியோ காட்சி பின்னால் சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவின் மூலம் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments