''கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி வரிசையில் உதயநிதியின் மகனுடனும் இருப்பேன்'' - துரைமுருகன் பேச்சு

கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி வரிசையில் உதயநிதியின் மகனுடனும் தான் இருப்பேன் என்று ஆளுநரை சந்தித்த போது தெரிவித்ததை அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டு பேசியதால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
தொடர்ந்து கலகலப்பாக பேசிய அமைச்சர் துரைமுருகன், தான் மறைந்தபிறகு தனது நினைவிடத்தில் 'கோபாலபுரத்து விசுவாசி இங்கே உறங்குகிறான்' என்ற ஒரு வரியை எழுதினால் போதும் என்று உருக்கமாக கூறினார்..
Comments