ஜம்மு காஷ்மீரில் மோசடி செய்து கைதான கிரண் பட்டேலின் மனைவி மாலினி பட்டேலை கைது செய்த போலீசார்..!

பிரதமர் அலுவலக அதிகாரி என்று கூறி ஜம்மு காஷ்மீரில் மோசடி செய்து கைதான கிரண் பட்டேலின் மனைவி மாலினி பட்டேலை அகமதாபாதில் போலீசார் கைது செய்துள்ளனர்.
தங்கள் பங்களாவை சட்டவிரோதமாக கைப்பற்றியதாக முன்னாள் குஜராத் அமைச்சரின் சகோதரர் ஜகதீஷ் சவடா என்பவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
பரூச் மாவட்டத்தில் தங்கியிருந்த மாலினி மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஸ்ரீநகர் விடுதியில் போலி அதிகாரியாக நடித்து தங்கியிருந்த கிரண் பட்டேல் மார்ச் 2ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அப்போது தமது கணவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மாலினி தெரிவித்திருந்தார்.
Comments