சொத்துத்தகராறு: மகனை ஓட ஓட விரட்டி வெட்டியதாக தாய்- தந்தை கைது..!

0 3488

தருமபுரி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த மகன் சொத்துக்கேட்டு தகராறில் ஈடுபட்டதால், சாலையில் ஓட ஓட விரட்டி தந்தை வெட்டியதாக கூறப்படும் சிசிடிவி பதிவு வெளியான நிலையில், தாய் - தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூங்கில்பட்டியைச் சேர்ந்த குமரவேல்-கோவிந்தம்மாள் தம்பதியினரின் 2வது மகன் பிரகாஷ், பெற்றோர் சம்மதமின்றி, வேறொரு மதத்தை சேர்ந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்ததால் குடும்பத்தினர் பேச்சுவார்த்தையின்றி இருந்து வந்துள்ளனர்.

தனது பங்கிற்கான சொத்தை பிரித்துத்தருமாறு அடிக்கடி கேட்டு வந்த பிரகாஷிடம் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றவே, தாய் தந்தை இருவரும் சேர்ந்து அவரை அரிவாளால் வெட்டியதாகவும், தப்பித்து ஓடியவரை விடாமல் விரட்டிச் சென்று வெட்டியதாகவும் கூறப்படுகிறது.

மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சில் செல்லும் வழியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்கச்சென்ற பிரகாஷை, அங்கிருந்த போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments