சென்னை மாநகராட்சி 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்தார் மேயர் பிரியா - 82 புதிய அறிவிப்புகள்

0 1228
சென்னை மாநகராட்சி 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்தார் மேயர் பிரியா - 82 புதிய அறிவிப்புகள்

சென்னை மாநகராட்சியின் 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த மேயர் பிரியா, 82 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

மாநகராட்சி பள்ளிகளில் 12ஆம் வகுப்பில் பயின்று நீட், ஜே.இ.இ. போன்ற போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, உயர்க்கல்வி படிக்கச்செல்லும் மாணவர்களின் முதலாம் ஆண்டு கல்விக்கட்டணத்தை மாநகராட்சியே செலுத்தும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்காரச்சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 78 கிலோ மீட்டர் நீள உட்புற சாலைகள் 55 கோடி ரூபாய் மதிப்பிலும், தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 149 கோடி ரூபாய் மதிப்பில் 251 கிலோ மீட்டர் தூர சாலைகள் மறுசீரமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2023-2024ஆம் நிதி ஆண்டில் மாநகராட்சிக்கு 4,131 கோடி ரூபாய் வருவாயும், 4,466 கோடி ரூபாய் செலவும் உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி 35 லட்ச ரூபாயிலிருந்து 40 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments