ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ்க்கில் வசிக்கும் மக்களுக்கு, உணவு பொருட்களை வழங்கிய தன்னார்வலர்கள்..!

0 790

உக்ரைனில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ்க்கில் வசிக்கும் மக்களுக்கு, தன்னார்வலர்கள் உணவு பொருட்களை வழங்கி உதவினர்.

லுஹான்ஸ்கில் உள்ள சிறிய நகரமான தோஷ்கிவ்கா, போருக்கு முன்னதாக பல ஆயிரம் மக்கள் வசிக்கும் இடமாக இருந்தது. போரால் அந்நகரமே உருக்குலைந்த போதிலும், அங்கு இன்னும் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

போரால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களது வாழ்வாதாரத்திற்காக தன்னார்வலர்களின் உதவிகளை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு உணவு, உடை போன்றவற்றை தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments