2400 கோடி மோசடி செய்த ஆருத்ரா கோல்டு நிறுவன வழக்கில் மேலும் இருவர் கைது..!
ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில், தேடப்பட்டு வந்த 2 நிர்வாகிகளை, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 2,438 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆருத்ரா நிறுவன இயக்குனர்கள், மேனேஜர்கள் உட்பட 8 பேரை கைது செய்தனர்.
வெளிநாடு தப்பிச்சென்ற இயக்குனர்களை பிடிக்க. ரெட் கார்னர் நோட்டீஸ் மற்றும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த இயக்குனர்களில் ஒருவரான ஹரிஷையும், நிர்வாகி மாலதியையும் வேலூரில் போலீசார் கைது செய்துள்ளனர்.
மோசடி செய்த பணத்தை வைத்து சொத்துக்கள் வாங்கப்பட்டது குறித்தும், தலைமறைவாக இருக்கும் மற்ற இயக்குனர்கள் குறித்தும் ஹரிஷிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments