புதுக்கோட்டை மாவட்டத்தில் மாசி மலை கருப்பு கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி!

0 1671

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த ராஜாப்பட்டி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாசி மலை கருப்பு கோயில் திருவிழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, சேலம், ஈரோடு, மதுரை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 600 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஜல்லிக்கட்டை முன்னிட்டு அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments