ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்த் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை..!

0 1334

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஜெயந்த் உடலுக்கு மதுரை ஆட்சியர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லெப்ட்டினன்ட் கர்னல் ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்தின் உடல் விமானப் படை விமானம் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்படி, மேஜர் ஜெயந்த் உடல் தனி விமானத்தில் இரவு ஒரு மணி அளவில் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது.

விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments