மினி லாரி - கார் நேருக்கு மோதி விபத்து - 3 பேர் பலி

0 1037

திருவண்ணாமலை மாவட்டம் பெரியகோளாப்பாடியில், மினி சரக்கு லாரியும் - காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயமடைந்தனர்.

பெரியகோளாப்பாடியைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை பெற்றுவிட்டு, குடும்பத்தினர் 5 பேரும் காரில் திரும்பியுள்ளனர்.

அப்போது, கோயம்புத்தூரிலிருந்து சென்னை நோக்கி காலி பீர் பாட்டில்களை ஏற்றிச் சென்ற மினி லாரி, காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments