உக்ரைனில் காயமடைந்த வீரர்களை வெளியேற்ற நடமாடும் மருத்துவமனை பேருந்து..!

0 1541

உக்ரைனில் போரில் காயமடைந்துள்ள வீரர்களுக்காக நடமாடும் மருத்துவமனை பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

6 படுக்கை வசதிகள் மற்றும் 6 மருத்துவர்களுடன் உள்ள இந்த பேருந்து, காயமடைந்த வீரர்களை போர் பகுதியில் இருந்து வெளியேற்றி வருகிறது.

அவ்ஸ்ட்ரிக்கா பஸ் (Avstriika Bus) என பெயரிடப்பட்டுள்ள இந்த பேருந்தை உருவாக்க 6 மாத காலம் ஆனதாகவும், கடந்த ஒன்றதை மாதமாக இயக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த பேருந்து பழுதடைந்ததால் அதற்கு மாற்றாக மற்றொரு பேருந்தும் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் புதிய பேருந்துகளை வாங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments