பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்துகளை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய இளைஞர் கைது..!

பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்துகளை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
சாலியமங்கலம், பூண்டி தோப்பு கிராமத்தை சேர்ந்த விக்டர் ஜேம்ஸ் ராஜா பி.எச்.டி பயின்று வருவதாக கூறப்படுகிறது. இவர் பிரதமர் மோடி குறித்த அவதூறான கருத்துக்களை பிரதமர் அலுவலக இமெயிலுக்கு அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து சஞ்சய் கெளதம் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் 9 பேர் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை கைது செய்து புதுக்கோட்டை சாலையில் உள்ள மத்திய அரசின் ஐஐசிபிடி விருந்தினர் மாளிகையில் வைத்து நீண்ட நேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments