ஒடிசாவில் கேமரா மற்றும் மைக்ரோசிப் போன்ற சாதனங்களுடன் பிடிபட்ட புறா.. உளவு பார்க்க அனுப்பப்பட்டதா என போலீஸார் தீவிர விசாரணை..!

0 1245

ஒடிசாவின் பாரதீப் கடற்பகுதியில் கேமரா மற்றும் மைக்ரோசிப் போன்ற சாதனங்கள் பொருத்தப்பட்ட புறா ஒன்று பிடிபட்டது.

ஜகத்சிங்பூர் மாவட்டத்திலுள்ள கோனார்க் கடற்கரையிலிருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் மீனவர்கள் சிலர், சில தினங்களுக்கு முன்பு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, காலில் கேமிரா போன்ற சாதனங்கள் பொருத்தப்பட்ட புறா ஒன்று மீன்பிடி படகில் வந்து அமர்ந்ததுள்ளது.

அதன் காலிலும், இறக்கையிலும் ஏதோ எழுதப்பட்டிருப்பதை அறிந்த பெஹெரா என்ற மீனவர், அதைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

இந்த புறா உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments