"ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் கொண்டுவரப்படும்.." - அமைச்சர் ரகுபதி..!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்திற்குப்பின், பேட்டியளித்தபோது, அவர் இதனை தெரிவித்தார்.
ஆன்லைன் ரம்மி தடை விவகாரத்தில் சட்டம் இயற்ற, தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இருப்பதாக நீதிமன்றமே கூறியுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், ஆனால், ஒரே காரணத்தை வெவ்வேறு மாதிரியாக கூறி, ஆளுநர் மீண்டும், மீண்டும் மசோதாவை திருப்பி அனுப்புவதாகவும் தெரிவித்தார்.
Comments