ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் ஹோலி கொண்டாட்டம்..!

ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பஞ்சாப்பில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.
கசாவிலுள்ள எல்லைப்பாதுகாப்புப்படை தலைமையகத்தில் வீரர்கள் அனைவரும் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள், ஆடல் பாடலுடன் உற்சாகமாக ஹோலி கொண்டாடினர்.
மேற்குவங்கத்தில் உள்ள இந்தியா-வங்கதேச எல்லைப் பகுதியான ஃபுல்பாரியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்களும் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.
இதேபோல் தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் ஹோலி கொண்டாடினர். இதில் சி.ஆர்.பி.எஃப் டிஐஜி உபாத்யா, அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர்.
Comments