வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்.. தமிழ்நாடு அரசின் பணிகள் திருப்திகரமாக உள்ளது - பீகார் ஐ.ஏ.எஸ் அதிகாரி

0 940

டமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக திருப்பூரில் ஆய்வு மேற்கொண்ட பீகார் மாநில குழுவினர், தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளதாக கூறி நன்றி தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த பீகார் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலமுருகன், ஜோத்பூரில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது போல தவறான வீடியோ பகிரப்பட்டதே சர்ச்சைக்கு காரணம் என்று தெரிவித்தார்.

மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பரவிய தகவல் வதந்தி என அவர்களுக்கு புரியும் வகையில் ஹிந்தியில் விளக்கமளித்தார்.

பின்னர் பேசிய திருப்பூர் எஸ்.பி சஷாங் சாய், பணம் சம்பாதிக்க சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோரின் வங்கி கணக்கை முடக்க பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments