கடலூரில் ஸ்டுடியோ உரிமையாளர் கொலை - மளிகை கடைக்காரர் உட்பட 3 பேர் கைது

0 1583

கடலூரில், மனைவியுடன் தவறான உறவில் இருந்ததோடு அவரது தற்கொலைக்கும் காரணமான ஸ்டுடியோ உரிமையாளரை கூலிப்படையை ஏவிக் கொலை செய்த மளிகைக் கடைக்காரர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

குறிஞ்சிப்பாடியில் ஸ்டூடியோ நடத்தி வந்த சுந்தரமூர்த்தி என்பவர், கடந்த 27ம் தேதி இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவருக்கு எதிரிகள் யாரும் இல்லை என முதலில் தெரியவந்த நிலையில், சுந்தரமூர்த்தியுடன் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்ததாக மளிகைக்கடை நடத்தி வரும் ஏழுமலை என்பவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, சுந்தரமூர்த்தியின் ஸ்டுடியோவுக்கு போட்டோ எடுக்கச் சென்ற போது ஏழுமலையின் மனைவிக்கும் சுந்தரமூர்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததும், இதனை ஏழுமலை கண்டித்ததால் அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதனால், சுந்தரமூர்த்தியை கொல்ல திட்டமிட்ட ஏழுமலை, 3 லட்சம் கொடுத்து கூலிப்படை மூலம் அவரை கொன்றது விசாரணையில் அம்பலமானது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments