முதலமைச்சரின் பிறந்தநாள் புகைப்படக் கண்காட்சி.. ஆர்வமுடன் பார்த்துச் சென்ற கல்லூரி மாணவிகள்

0 1509
சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்று வரும் முதலமைச்சரின் பிறந்தநாள் புகைப்படக் கண்காட்சியில் அவரது மழலைப்பருவம் தொடங்கி , 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பொதுவாழ்வின் அரிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்று வரும் முதலமைச்சரின் பிறந்தநாள் புகைப்படக் கண்காட்சியில் அவரது மழலைப்பருவம் தொடங்கி , 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பொதுவாழ்வின் அரிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

image

முதலமைச்சர் மு .க .ஸ்டாலினின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 'எங்கள் முதல்வர், எங்கள் பெருமை ' எனும் தலைப்பில், அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டிலும், நடிகர் ஜோ மல்லூரியின் ஒருங்கிணைப்பிலும் இப்புகைப்படக் கண்காட்சி காலை 8 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெற்று வருகிறது.

image

மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் சிறையில் அனுபவித்த சிரமங்களை விளக்கும் வகையில் ' மாதிரி சிறைக்கூடம் ' கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது . அந்த அறையினுள் சிறைக்காவலர் ஒருவர் தரையில் அமர்ந்திருக்கும் ஸ்டாலினின் மார்பில் எட்டி உதைப்பதும் , லத்தியை கொண்டு அவரைத் தாக்குவதும் சிலைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் சிறைக்காவலர் தன்னை அடித்து உதைத்து தாக்கியபோது வலி தாங்க முடியாமல் , முதலமைச்சர் ஸ்டாலின் மூச்சுவாங்கியபடி அலறுவது போன்ற சத்தம் , ஆடியோ பதிவுகளாக தொடர்ந்து ஒலிபரப்பப்படுகிறது.

 image

முதலமைச்சர் ஸ்டாலின் சின்னஞ்சிறு குழந்தையாக தனது தந்தையின் மடியில் அமர்ந்திருக்கும் புகைப்படம் முதல் , தந்தை கருணாநிதியின் இறுதிக் காலம் வரை அவர் உடன் இருக்கும் புகைப்படங்கள் பலவும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன .

பெரியார் , அண்ணா , ஜெயலலிதா , வைகோ , ஜி.கே.மூப்பனார் உள்ளிட்ட தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுடனும் பிரதமர் மோடி , சோனியா காந்தி , ராகுல் காந்தி , சரத்பவார் ,மம்தா பானர்ஜி , சீதாராம் யெச்சூரி , அரவிந்த் கெஜ்ரிவால் , ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட தேசிய அரசியல் தலைவர்களுடனும் பல்வேறு காலங்களில் முதலமைச்சர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தனியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments