தனது சகோதரி மகளின் நிச்சயதார்த்த நிகழ்வில் பங்கேற்க சென்ற தாய்மாமன் மண் லாரி மோதி உயிரிழப்பு..!

0 2337

ராணிப்பேட்டை மாவட்டம் அக்ராவரம் பகுதியில் சகோதரி மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக இருசக்கர வாகனத்தில் சென்ற தாய்மாமன் கவனக்குறைவாக சாலையில் திரும்பியதில் எதிரே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மருதாலம் கூட்ரோடு கஸ்தூரி கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான ஏழுமலை. இவர் அக்ராவரத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு உறவினர்கள் 2 பேருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அக்ராவரம் பகுதியில் கவனக்குறைவாக சாலையின் இடதுபுறம் திரும்பியபோது எதிரே மண் ஏற்றிவந்த லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தநிலையில், படுகாயம் அடைந்த 2 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments