குமரிமுத்துன்னு நெனச்சீங்களா ‘மர்டர்’ மாரி முத்துடா.. மிலிட்டரி திடீர் கோபம்..! மார்டன் பெண்ணுக்கு யெஸ் சொன்னவர்..

0 2490

டுவிட்டரில் மார்டன் பெண்ணை சந்திக்க விருப்பம் தெரிவித்து செல்போன் நம்பரை பதிவிட்டதால், சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாக்கப்பட்ட பிரபல குணச்சித்திர நடிகர் மாரிமுத்து, தன்னை விமர்சித்தவர்களை வரிசையாக நிற்க வைத்து வெட்ட வேண்டும் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்

மருது, கொம்பன், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களிலும், சீரியல்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் இயக்குனர் மாரிமுத்து.

அண்மையில் டுவிட்டர் கணக்கு ஒன்றில் என்னை சந்திக்க விருப்பமா ? என்று மாடர்ன் பெண்ணின் புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. அதில் எஸ் என்று பதிவிட்ட மாரிமுத்து தனது செல்போன் நம்பரை பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து யோவ் மிலிட்டரி என்னய்யா இந்தப்பக்கம் ? என்று மாரிமுத்துவை கேலி செய்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வந்தனர். இந்த வயசில போயி இப்படியா ? என்று சிலர் மாரிமுத்துவை கடுமையாக விமர்சித்தனர்

இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் அமைதி காத்து வந்த மாரிமுத்து , இது தொடர்பாக தன்னை பேட்டி எடுக்க வந்த யூடியூப்பரை ஆவேச பதில்களால் பஞ்சராக்கி பந்தாடிய சம்பவம் அரங்கேறி உள்ளது. நான் தான் அந்த பெண்ணின் கணக்கில் எனது செல்போன் நம்பரை பதிவிட்டேன் என்று ஒப்புக் கொண்ட நடிகர் மாரிமுத்து, தன்னை பற்றி கேலி செய்தவர்களை முட்டாபயல்கள் என்றும் அவர்களை எல்லாம் வரிசையாக நிற்க வைத்து வெட்ட வேண்டும் என்றும் கொந்தளித்தார்

தன்னை ஒரு நிகழ்கால ஹிட்லர் என்று கூறிக் கொண்ட மாரிமுத்து என்னை போய் பிற்போக்குவாதின்னு சொல்றீங்க.. அதிகாலை 3 மணிக்கு தியேட்டர் போய் படம் பார்க்கறவனால யாருக்கு பிரயோசனம் அவனையும், தமிழை பிழையாக எழுதுபவர்களின் விரல்களையும் வெட்ட வேண்டும் என்றார்

ஒரு கட்டத்தில் ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசிய மாரிமுத்துவிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று அந்த யூடியுப்பர் பேட்டியை முடித்துக் கொண்டு சென்ற அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments