இந்திய விமானப் படைக்கு எச்.டி.டி-40 ரகத்தைச் சேர்ந்த 70 பயிற்சி விமானம் வாங்க அமைச்சரவை ஒப்புதல்..!

0 1193

இந்திய விமானப் படைக்கு எச்.டி.டி-40 ரகத்தைச் சேர்ந்த 70 அடிப்படை பயிற்சி விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவை குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 6 ஆயிரத்து 828 கோடி ரூபாய் மதிப்பில் இந்திய விமானப்படைக்கு எச்.டி.டி-40 ரகத்தை சேர்ந்த 70 பயிற்சி விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அடுத்த ஆறு ஆண்டுகளில் இந்த விமானங்கள் ஒப்படைக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதே போல, எல் அண்ட் டி நிறுவனம் மூலம் 3 ஆயிரத்து108 கோடி ரூபாய் செலவில் 3 பயிற்சி கப்பல்களை கட்டுவதற்கான ஒப்பந்தத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments