ஒப்பந்ததாரரிடம் 15,000 ரூபாய் லஞ்சம் கேட்ட செயற்பொறியாளர் பணியிடை நீக்கம்..!

0 1564

பள்ளி கழிப்பறை கட்டியதில் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் கேட்ட செயற்பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

மதுரையில் பொதுப்பணித்துறை கட்டட பராமரிப்பு செயற்பொறியாளராக பணி புரிந்தவர் ரமேஷ் குமார்.

இவர் திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 6.77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டியதற்கான பணத்தை விடுவிக்க ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் கேட்டு உள்ளார்.

ஒப்பந்ததாரர் முருகன் என்பவர் ஏற்கனவே 50,000 ரூபாய் லஞ்சமாக கொடுத்த நிலையில் கூடுதலாக 15,000 ரூபாய் கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இதில், 'உதவி செயற்பொறியாளருக்கு 2% கொடுப்பீங்க, செயற்பொறியாளருக்கு 5% கூட இல்லையா?' என கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments