அரசு பேருந்து வருவதை கவனிக்காமல் வேகமாக சாலையில் திரும்பிய போது இருசக்கர வாகனம் மீது, பேருந்து மோதி விபத்து..!

வேலூர் குடியாத்தத்தில் அரசு பேருந்து வருவதை கவனிக்காமல் சாலையில் திரும்பிய இருசக்கர வாகனம் மீது, பேருந்து மோதிய காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
குடியாத்தம் ரயில்வே மேம்பாலம் அருகே பெட்ரோல் பங்க்கில் இருந்து வேகமாக வெளியே வந்த இருசக்கர வாகனம், வலது புறம் வரும் வாகனங்களை கவனிக்காமல் சாலையில் வளைந்தது.
அப்போது, அவ்வழியே வந்த அரசு பேருந்து மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் சாலையில் விழுந்து படுகாயமடைந்தனர்.
இருசக்கர வாகனம் மீது மோதிய அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் மோதி நின்றது. தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள், சாலையின் இருபுறத்தையும் கவனிக்காமல், கவனக்குறைவாக வளைந்ததால் விபத்து ஏற்பட்டது.
Comments