மார்ச் 20ஆம் தேதி தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் - சபாநாயகர் அப்பாவு

தமிழ்நாடு அரசின் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வரும் மார்ச் மாதம் 20ம் தேதி சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் தாக்கல் செய்வார் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர், பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு சட்டமன்ற அலுவல் ஆய்வுக் குழு கூடி, சட்டமன்ற கூட்டத்தை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பதை தீர்மானிக்கும் என்றார்.
மேலும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு இருக்கை ஒதுக்கீடு சம்பந்தமான கேள்விக்கும் சபாநாயகர் பதில் அளித்தார்.
Comments