ஈரோட்டில் வாக்காளர்களை அடைத்து வைத்து திமுகவினர் பரிசு பொருட்கள் வழங்குவதாக அதிமுகவினர் புகார்..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களை அடைத்து வைத்து திமுகவினர் பரிசு பொருட்கள் வழங்குவதாக அதிமுகவினர் புகார் கூறியதால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
breathe....
பெரியண்ண வீதி வாக்குச்சாவடி அருகே திமுகவினர், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவதாக கூறி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை மறுத்த திமுகவினர், குறிப்பிட்ட இடத்தில் தங்களது குடும்பத்தினர் தான் இருப்பதாக கூறி அவர்களுடன் வாக்குவாதம் செய்ததால் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
Comments