லாரி மீது நேருக்கு நேர் மோதிய மினி லாரி தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் நான்கு பேர் பலி..!

0 1356

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, லாரி மீது மினி லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பச்சாபாளையத்தை சேர்ந்த நபர், உயிரிழந்த தனது மகனுக்கு திதி கொடுப்பதற்காக உறவினர்கள் 40க்கும் மேற்பட்டோருடன், மினி லாரியில் கொடுமுடி ஆற்றுக்கு சென்று திரும்பியுள்ளனர்.

வாலிபனங்காடு என்ற இடத்தில் வந்த போது, எதிரே லோடு ஏற்றிக் கொண்டு வந்த லாரி மீது மினி லாரி மோதி தலைக்குப்புற கவிழ்ந்ததில், அதில் பயணித்தவர்கள் வாகனத்துக்கு அடியில் சிக்கிக் கொண்டனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அமைச்சர் சாமிநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதற்கிடையே, விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments