''இ-சஞ்சீவினி செயலியால் 10 கோடி பேர் பலன்..'' - பிரதமர் மோடி..!

பணப் பரிமாற்றத்திற்கான இந்தியாவின் UPI மற்றும் இணையம் மூலமாக மருத்துவரிடம் ஆலோசனை பெறும் இ-சஞ்சீவினி செயலி ஆகியவை டிஜிட்டல் இந்தியாவின் சக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியின் 98வது பதிப்பில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் யூபிஐ, சிங்கப்பூரின் பேநவ் இணைப்பால் உலகின் பல நாடுகள் யூபிஐயை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளன என பிரதமர் தெரிவித்தார்.
மேலும், கரோனா காலத்தில் துவங்கப்பட்ட இ-சஞ்சீவி திட்டத்தில் இதுவரையில் 10 கோடி பேர் மருத்துவருடன் உரையாடி பயன் பெற்றுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
Comments